வறுமையால் குவைத் சென்ற ஈரோடு பெண்மணி! ஷேக்கிடம் சிக்கி சின்னாபின்னமான பரிதாபம்!

இந்தக்காலகட்டத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்களை, எஜமானர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், ஓய்வு ஆகியவற்றை தராமல் வீட்டு வேலை செய்பவர்களை கொத்தடிமை போன்று நடத்தி வருகின்றனர்.


இது போன்ற ஒரு சம்பவம் குவைத் நாட்டில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம்  உள்ள கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின். குவைத் நாட்டில் உள்ள தன் வீட்டு உரிமையாளரிடம் வீட்டுவேலைப்பெண்ணாக சேர்ந்தார். கடந்த நான்கு மாதங்களாக சரியான ஊதியத்தை வழங்காமலும், துன்புறுத்தியும் வந்துள்ளார்.

தன் கணவனான நவாஸ்காணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அவதிப்படுவதை கூறியுள்ளார். பின்னர் சாட்சிகளாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு அனுப்பியுள்ளார்.

குவைத்தில் வீட்டு உரிமையாளரால் துன்புறுத்தப்படும் தனது மனைவியை மீட்டு தர வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அப்-பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.