விஜய் டிவி ராஜா ராணி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்! மாப்பிளை யார் தெரியுமா?

தெய்வமகள் , ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்து சின்ன திரை உலகில் பிரபலமானவர் நடிகை ஷப்னம் ஆவார்.


தமிழ் சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ஷப்னம். இவர் ஆர்யன் என்பவரை நேற்றையதினம் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷப்னம்மும் அவருடைய உறவினருமான ஆரியன் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்

அதற்கு பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது . இதற்கு பின் அடுத்த ஆண்டான 2018 ஆம் ஆண்டு வரும் காதலர் தினத்தை தங்களது திருமணம் நடைபெறும் என இந்த ஜோடி அறிவித்திருந்தது .

ஆனால் அவர்கள் சொன்னபடி அந்த திருமணம் நடைபெறவில்லை. தற்போது ராஜா ராணி சீரியல் முடிவடைந்த நிலையில் ஷப்னம் ஆரியன் திருமணம் வெற்றிகரமாக நடைபெற்றது. 

இந்த நிமிஷத்தில் நிமிஷத்திற்கு ஆக தான் இரண்டு வருடமாக நாங்கள் காத்திருந்தோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நடிகை ஷப்னம். எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சொந்த பந்தங்களுடன் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நல்லபடியாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.