ராஜா ராணி நடிகைக்கு மீண்டும் திருமணம்! பிப்ரவரியில் நிறுத்தப்பட்டது செப்டம்பரில் நடக்குதாம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த நடிகை ஷப்னதிற்கு அடுத்தமாதம் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகை ஷப்னம் தெய்வமகள் , ராஜா ராணி போன்ற சீரியல்களில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக இவர் தன்னுடைய உறவினரான ஆரியன் என்பவரை காதலித்து வந்தார் . இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .

2019 பிப்ரவரியில் இவர்கள் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவர்களுக்கு திருமணம் நடக்காது எனவும் சமீபத்தில் ஒரு சில தகவல்கள் பரவி வந்தன. 

தன்னுடைய திருமணத்தைப் பற்றி எதுவும் பேசாமல் மௌனம் காத்து இருந்த ஷப்னம் தற்போது தன்னுடைய திருமணம் வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார் . ஷப்னம் ஆரியன் திருமணம் அவர்களுடைய சொந்த ஊரில் நடைபெறும். அதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று கூறப்படுகிறது . 

இதனையடுத்து ஷப்னத்தின் ரசிகர்கள் நண்பர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் .