ஐ லவ் யூனு சொன்னானுங்க..! அக்கானு சொல்றானுங்க..! வம்சம் சந்தியாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்..! என்னாச்சு தெரியுமா?

சீரியல் நடிகை சந்தியா, தொகுப்பாளினியாக இருந்த போது பல பேர் தன்னிடம் வந்து ஐ லவ் யூ ன்னு கூறினார்கள் என்றும், ஆனால் இப்பொழுது நடிகையாக மாறிய பின்பு தன்னை பார்த்து அனைவரும் அக்கா என்று கூப்பிடுகிறார்கள் என அவரே முதன்முறையாக மனம் திறந்து கூறியிருக்கிறார்.


தமிழில் சின்னத்திரையில் வம்சம் சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சந்தியா ஆவார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், செல்லமடி நீ எனக்கு போன்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த வம்சம் சீரியல் இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சின்னத் திரை ரசிகர்களின் பிடித்தமான நடிகையாக மாறினார். 

சீரியலில் மூச்சுக்கு முன்னூறு தடவை மச்சான் மச்சான் என்று அழைத்து பெரிய திரை நமிதாவிற்கு டஃப் கொடுத்தார் என்று தான் கூற வேண்டும். நீண்ட இடைவேளைக்கு பின்பு சமீபத்தில் சந்திரலேகா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சந்தியா நடித்திருந்தார். தொகுப்பாளினியாக இருந்து வந்த சந்தியா நடிகையாக மாறிய பின் அவருக்கு நேர்ந்த மாற்றங்களைப் பற்றியும் ரசிகர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர் தொகுப்பாளினியாக இருந்த போது பலரும் என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று கூறினர். ஆனால் நடிகையாக மாறிய பின் பலரும் என்னை அக்கா அக்கா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று கூறினார்.

இதற்கிடையில் அவர் உடல் எடை கூடி பப்ளியாக காணப்பட்டார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் சந்தியா, தன்னுடைய உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்துடன் காணப்படும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் எப்படி உடல் எடையை வெகுவாக குறைத்து இவ்வளவு அழகாக காட்சி தருகிறீர்கள்? என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்த நடிகை சந்தியா, பொதுவாகவே நான் விலங்குகளை அதிகம் விரும்புவேன். என் வீட்டிலும் பறவைகள் பலவற்றை நான் வளர்த்து வருகிறேன். 

ஆகையால் மாமிசத்தின் மீது இருந்த ஆசையை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். நாட்கள் செல்ல செல்ல மொத்தமாகவே நான் வெஜ் உண்பதையே நிறுத்திவிட்டேன். இப்பொழுதெல்லாம் முட்டையை சாப்பிடுவது கூட முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் வேளையில் நொறுக்குத்தீனிகளை உண்பதையும் முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன். இவைகளை நான் பின்பற்றுவது மட்டுமே என் உடல் எடை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறாக நடிகை சந்தியா தன்னுடைய ரசிகர்களிடம் தன் உடல் எடை குறைத்ததை பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார். தற்போது சின்னத்திரை நடிகை சந்தியா, உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.