பிரபல சீரியல் நடிகை! வயது 21..! வைரலாகும் அந்தரங்க வீடியோ..! ஆனால்?

மலையாளத்தில் பிரபல சீரியல் நடிகையாக வலம்வரும் ஜூஹி ரஷ்டகியின் ஆபாச வீடியோ சமூகவலைதளத்தில் வெளியான நிலையில் அதில் இருப்பது நான் இல்லை என்று தற்போது அவர் கூறியிருக்கிறார்.


நடிகை ஜூஹி ரஷ்டகி, மலையாளத்தில் பிரபலமான பல சீரியல்களில் நடித்து முன்னணி சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். அதிலும் மலையாளத்தில் வெளியான உப்பும் மிளகும் என்ற சீரியலின் மூலமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சின்னத்திரையில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை அடுத்து பெரிய திரையிலும் அதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார் நடிகை ஜூஹி ரஷ்டகி.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தன்னுடைய வீட்டில் முடங்கிக் கிடக்கும் நடிகை ஜூஹி ரஷ்டகிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சமூக வலைத்தளத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி அதில் இருப்பது சின்னத்திரை நடிகை ஜூஹி ரஷ்டகி என்று போடப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த நடிகை ஜூஹி ரஷ்டகி, அதிர்ந்து போனார். பின்னர் எனது பெயரில் சமூக வலைத்தளத்தில் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோ போலி வீடியோ என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் . நான் இதுகுறித்து எர்ணாகுளம் போலீசிடம் புகார் அளித்திருக்கிறேன். 

விரைவில் இந்த போலி ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கண்டுபிடித்து தண்டிப்பார்கள் என்று அவர் கூறினார். அந்த ஆபாச வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.