அவனுக்கு பணம் வேணும்! அதுக்கு என்ன யூஸ் பண்றான்! மகாலெட்சுமி வெளியிட்ட பகீர் தகவல்!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தனது கணவருக்கும், சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தொடர்பு உள்ளதாக சில தினங்களுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் தனது கணவர் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாகவும் அந்தப் பேட்டியில் ஜெயஸ்ரீ கூறியிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளிவந்த பிறகு பேட்டியளித்த சீரியல் நடிகர் ஈஸ்வர், என் மனைவி ஜெயஸ்ரீ என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் கணவருக்கும் ஜெயஸ்ரீ க்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இவ்வளவு நாட்கள் மவுனமாக இருந்த சீரியல் நடிகையின் மகாலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். சில நாட்களாக நடந்து வரும் இந்த பிரச்சனை எனது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

எனது கணவரை விவாகரத்து செய்யும் வேலையில் நான் ஈடுபட்டுள்ளேன். அவர் என்னுடைய பணத்தின் மீது ஆசை படுகிறார் அதேபோல ஜெயஸ்ரீயும் பணத்தின் மீது ஆசை கொண்டவர் . என் கணவரும் ஜெயஸ்ரீயும் இணைந்துதான் என்னையும் ஈஸ்வரையும் ஒன்றாக வைத்து பேசுகின்றனர் எனவும் மகாலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் நானும் ஈஸ்வரும் வீடியோ கால்களில் பேசியுள்ளோம் எனவும், எனது மகன் ஈஸ்வரை அப்பா என்று அழைத்ததாகவும் ஜெயஸ்ரீ குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள் என்று மகாலட்சுமி கூறியுள்ளார். 

நானும் ஈஸ்வரம் ஒரே சீரியலில் நடிக்கிறோம்.நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அதை தாண்டி வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை. என் கணவரும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீயும் திட்டம்போட்டு தான் இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர் எனவும் நடிகை மகாலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் நான் ஈஸ்வரின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை வாங்கிக் கொடுத்தேன் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். பொதுவாகவே படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்யும் லைட்மேன் அல்லது இயக்குனர் போன்றவர்களுக்கு பிறந்தநாளில் நான் ஏதாவது பரிசாக கொடுப்பேன். இயக்குனருக்கு கூட நானும் ஒரு முறை சட்டை வாங்கி கொடுத்துள்ளேன். 

ஜெயஸ்ரீ மற்றும் என் கணவரும் பணத்திற்காக என்னையும் ஈஸ்வரையும் இணைத்து வைத்து பேசுகிறார் எனவும் மகாலட்சுமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.