பொன்மகள் வந்தாள் நடிகருடன் தகாத உறவு? தெய்வம் தந்த வீடு சீதா விவாகரத்திற்கு காரணம் இது தான்..!

பொன்மகள் வந்தாள் சீரியலில் தன்னுடன் நடித்த விக்கி கிருஷ் என்பவரை காதலித்து வந்தமையால் தான் தெய்வம் தந்த வீடு சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மேக்னா தன்னுடைய காதல் கணவரை விட்டு விலகி விவாகரத்து செய்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா. இவர் இந்த சீரியலில் சீதா ராம் குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள் சீரியலில் நடித்து மீண்டும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். 

தமிழைப் போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை மேக்னா. இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மேக்னா தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர், டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்களும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகினர் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மேக்னாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பு கருத்து வேறுபாடு ஆக மாறி விவாகரத்து வரை கொண்டு சென்றது. தற்போது மேக்னாவும் அவரது காதல் கணவர் டான் டோமியும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்த செய்தியை கேட்ட நடிகை மேக்னாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில் அவர் பொன்மகள்வந்தாள் சீரியலில் நடித்து கொண்டு இருந்தபோது தன்னுடன் நடித்த விக்கி கிருஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் தன் கணவரை விட்டு பிரிந்ததாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து இருவருமே தங்களுடைய கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.