பாண்டியன் ஸ்டோர் முல்லை கையில் குத்தியிருக்கும் ஒரு மாமர்க்கமான டாட்டூ அதுவா? ரசிகர்களை ஏடா கூடமாக யோசிக்க வைக்கும் புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்த நடிகை சித்ரா தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.


பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சித்ரா நடிக்கும்போது மட்டும் தனது கையிலிருக்கும் டாட்டூவை மறைத்து மேக்கப் செய்து நடிக்கிறாராம். சீரியல் நடிகை சித்ரா கையில் டாட்டூ இருப்பது போல உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த டாட்டூவில் என்ன இருக்கிறது ஏன் சீரியலில் நடிக்கும் போது அதை மறைத்து நடிக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். சிரியல் நடிகை சித்ரா சின்னதிரைக்கு வருவதற்கு முன்பாக விஜே மற்றும் ஆர் ஜே ஆக இருந்து வந்ததால் அந்த தொழில் மீது இருக்கும் பக்தியின் காரணமாக கையில் மைக் வடிவத்தில் டாட்டூ  போட்டுள்ளாராம்.

 சின்னத்திரையில் நடிக்கும் போது கையில் இருக்கும் டாட்டுவை மறைப்பதற்காக மேக்கப் செய்து டாட்டூ தெரியாதபடி சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.