பூட்டிய அலுவலகத்திற்குள் பிரபல டிவி நடிகையின் கணவர் சடலம்..! நேரில் பார்த்து அதிர்ந்த ஊழியர்கள்! சென்னை பரபரப்பு!

பிரபல சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சுகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா ஆவார். இவர் ஒரு சில சீரியல்களிலும் மேலும் ஒரு சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் கோபிநாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களாகவே கோபிநாத்திற்க்கும் அவரது மனைவியின் நடிகை ரேகாவிற்கும் இடையே பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் கோபிநாத்திற்கு தான் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி நடிகை ரேகா தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் உச்ச கட்டமாக நேற்று முன்தினம் ரேகாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே மிகப்பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து போன கோபிநாத் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் அலுவலக சாவி ஒன்று அவரிடம் இருந்ததால் அதை பயன்படுத்தி பூட்டை திறந்து அலுவலகத்திற்குள் சென்றிருக்கிறார் .அங்கே சென்ற அவர் துக்கம் தாங்க முடியாமல் மனம் உடைந்து அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

விடுமுறை முடிந்து ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்காக அலுவலகத்திற்கு சென்றபோது கோபிநாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர் . தகவலறிந்து வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கோபிநாத்தின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.