இந்த முறை ஆஸ்திரேலிய தொழில் அதிபர்..! 2வது கல்யாணத்திற்கு ரெடியான பிரபல சீரியல் நடிகை!

பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கர்நாடகத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை நித்யா ராம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மொட்டு மனசே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை நித்யா ராம் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அவள் என்ற சீரியலில் நடித்து பிரபலமானார்.

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் நடித்து சின்னத்திரை உலகில் பிரபலம் ஆனார்.நடிகை நித்யா ராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இந்நிலையில் நடிகை நித்யா ராம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.