யாருக்கும் தெரியாத ரகசியம்! ஆச்சரியங்களை அரங்கேற்றிய கோலங்கள் சீரியல் வில்லன்! குடும்பத்தோடு அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஷ்யாம்.


சின்னத்திரை நடிகர் ஷ்யாம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தென்றல், ஆனந்த கண்ணன் , கோலங்கள் என பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் ஆவார்.

 இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ஹீரோ . இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , சிங்கிள் ட்ராக் ஆகியவை தற்போது வெளியாகியுள்ளது . இந்த திரைப்படத்திற்கான சிங்கிள் ட்ராக்கை பாடியவர் சின்னத்திரையில் மூலம் பிரபலமான நடிகர் ஷ்யாம் தான் என்பது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  நடிகராக இருந்த ஷ்யாம் தற்போது பாடகராக புது அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் முதன் முதலாக சினிமாவில் பாடிய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் ஷ்யாம் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 கல்லூரியில் படித்துக் முதலே சினிமாவில் பாட வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வந்தவர் நடிகர் ஷ்யாம் . ஆனால் இவருக்கு சரியான வாய்ப்புகள் ஏதும் அமையாததால் மேடையில் பாடகராக வலம் வந்து கொண்டிருந்தார் . மேலும் நடிகர் கருணாஸ் உடன் இணைந்து பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

 எப்பொழுதும் கானா பாடல்களை அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் நடிகர் ஷ்யாம் தற்போது திரைப்படத்தில் பாடும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றிருக்கிறார் நீண்ட நாட்களாகவே திரைப்படத்தில் பாட முடியாமல் இருக்கிறதே எனும் வருத்தத்தில் இருந்த அவருக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

நடிகர் ஷ்யாமிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன இருவருமே சினிமா துறையில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . அதிலும் நடிகர் ஷ்யாமின் மகள் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஹீரோ படத்தின் சிங்கிள் டிராக், ஃபர்ஸ்ட் லுக் ஆகவே இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டு இருக்கிறது.