காம ரசம் சொட்ட சொட்ட காதல் பாட்டுக்கு டிக் டாக் நடனம்! ஆண் - பெண் போலீஸ் யார் தெரியுமா?

காதல் மகராணி என்ற பாடலுக்கு காவலர் உடையில் நடனம் ஆடி டிக் டாக் வெளியிட்ட ஜோடி, நாடக துணை நடிகர் நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


காவலர் உடை அணிந்திருந்த ஜோடி ஒன்று, காதல் பரிசு என்ற கமலஹாசனின் படத்தில் இடம்பெற்ற காதல் மகராணி என்ற பாடலுக்கு உடலை அசைத்து மெல்லிய ஆட்டம் போட்டு இருந்தனர். இந்த டிக் டாக் வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்கள் உண்மையிலேயே காவல்துறையைச் சேர்ந்தவர்களா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

ஆனால் தாங்கள் உண்மையிலேயே போலீஸ் அல்ல என்றும், தொலைக்காட்சி நாடக தொடரில் நடிக்கும் துணை நடிகர் நடிகை என்றும் அவர்கள் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த இருவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அம்மு ஆகியோர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அரவிந்த் அளித்துள்ள பேட்டியில், காவலர் வேடத்தில் நடிக்க இருந்த போது அதற்காக ஒத்திகை பார்த்ததாகவும், அப்போது துணை நடிகை அம்முவுடன் சேர்ந்து  டிக் டாக் வீடியோ செயலியில் நடனம் ஆடி பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

காவலர் உடையில் டூயட் பாடலுக்கு நடனம் ஆடியது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகாது என்று தான் நினைத்து இருந்ததாக அரவிந்த் கூறியிருந்தார். இதற்காக தமிழ்நாடு காவல் துறையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதேபோல் துணை நடிகையான அம்முவும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். தனது வீடியோவானது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ள அம்மு, இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.