அழகிய மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்! பிரபல நடிகை எழுதி வைத்த பகீர் கடிதம்!

பிரபல சின்னத்திரை நடிகை பிரகன்யா பிரஷாந்த் பார்கர் தன் மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .


ஹிந்தி  தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை பிரகன்யா பிரசாந்த் தன்னுடைய அழகிய மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சின்னத்திரை நடிகை பிரகன்யா புனேவில் உள்ள கண்வாயில் என்ற இடத்தில் தன் கணவர் மகள் என அழகிய குடும்பமாக வசித்து வந்துள்ளார். சமீபகாலமாகவே நடிகை பிரகன்யாவிற்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை ஆகையால் பெரிதும் விரக்தியடைந்து உள்ளார் நடிகை பிரகன்யா.

இந்நிலையில் நேற்று காலை நடிகை பிரகன்யாவின் கணவர் பார்கர் காலை 9 மணி அளவில் ஜிம்முக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி பிரகன்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மனைவியை இறந்த நிலையில் கண்ட பார்க்கர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.  மற்றொரு அதிர்ச்சியாக தன்னுடைய மகளும்  இறந்த நிலையில் கிடப்பதை  பார்த்து  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் . அப்போது அங்கு  இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர். 

இந்த அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய பார்க்க கண்களில் திடீரென்று அவரது மனைவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது . அந்த கடிதத்தில் "எங்களுடைய மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை ..நான் தான் என் மகளைக் கொன்று விட்டு நானும் தூக்கில் தொங்கினேன் " என்று எழுதி இருந்தார். 

இதனை பார்த்து பார்க்கர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இந்த கடிதத்தை  போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை பிரகன்யா விற்கு சீரியல்களில் நடிக்கத் நடிப்பதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.