தினகரனுக்கு அல்வா கொடுக்கும் செந்தில்பாலாஜி!

தினகரனின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தி.மு.க. பக்கம் தன்னுடைய பார்வையைத் திருப்பியிருக்கிறார் என்பதுதான் ஹாட்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிராக வந்ததில் இருந்தே தினகரனுக்கு இறங்குமுகம்தான். பதவியும் இல்லாமல் பணமும் இல்லாமல் என்ன செய்வது என்று புரியாமல் அலறிய அதிருப்தி எம்.எல்..க்கள் திசை தெரியாமல் தவித்தனர். இப்போது ஒவ்வொரு நபராக அடுத்த திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

தினகரனின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தி.மு.. பக்கம் தன்னுடைய பார்வையைத் திருப்பியிருக்கிறார் என்பதுதான் ஹாட்.

.தி.மு..வில் அவருக்கு தம்பித்துரையும் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரும் கடுமையான ஃபைட் கொடுத்துவருகிறார்கள். அதனால் அ.தி.மு..வில் இணைந்தால் செல்வாக்கு பெற முடியாதுஎன்பதால், தி.மு.. பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாம். அடுத்து நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.. வேட்பாளராக நிறுத்துவதற்கு தி.மு.. சாப்பில் சம்மதம் தெரிவித்துவிட்டதால், இணைவதற்கு தயாராகிவருகிறாராம்.

சசிகலா மற்றும் தினகரன் தொடர்பான சில விவகாரங்கள் செந்தில் பாலாஜியிடம் இருப்பதால், அவற்றை சுமுகமாக முடித்துகொடுத்து வரும்படி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆக, புத்தாண்டில் புதுக்கட்சியில் செந்தில்பாலாஜி இணைவார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தி.மு..வில் போட்டியாளராக இருந்த வாசுகி முருகேசன் இப்போது இல்லை என்பதால் முடிசூடா மன்னனாக வலம் வருவாராம்.

அண்ணன் தினகரன் இப்போதாவது அரவணைப்பாரா அல்லது போனால் போகட்டும் என்று அசட்டையாக இருப்பாரா?