செந்தில் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு சிறை விழா

ஜாமீன் தள்ளிப் போகுதே


அண்ணாமலையிடம் வாட்ச்க்கு ரசீது கேட்ட ஒரே காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டதாக சொல்லப்படும் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் ஓர் ஆண்டு சிறையில் நிறைவடைகிறது. இதனை, ’உச்சாப் போன ஓராண்டு’ என்ற ஹேஸ்டேக்கை பா.ஜ.க.வினரும் நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து வைரலாக்கி வருகிறார்கள்.

முதலாம் ஆண்டு சிறைவிழா வெற்றிகரமாக கொண்டாட வாழ்த்துகள் என்று நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து சொல்வது போன்றே கோவையில் தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. இந்த கொண்டாட்டம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, “முதலில் ஜூன் 14ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்ட இந்த விழா, பண மோசடி வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அதே நாள் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒருநாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் கோவையில் சாலைகள் கூட அமைக்காமல் 3 ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையடுத்தே செந்தில் பாலாஜி மீதும் தி.மு.க. மீதும் விமர்சனம் வைக்கும் வகையில் பா.ஜ.க.வின் ஐ.டி. விங் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து உச்சாப் போன ஓராண்டு’ என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதிகாரிகள் கைது செய்த நேரத்தில் செந்தில்பாலாஜி பயந்துபோய் பேண்ட்டில் உச்சா போய்விட்டார் என்று தி.மு.க.வினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே இப்படி வைரலாகி வருகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைதான அவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவர் கடந்த ஓராண்டாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் எடுப்பதற்கு தி.மு.க. வழக்கறிஞர் அணி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்திருக்கின்றன. இதனிடையே சமீபத்தில் 38வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எத்தனை நாட்கள் உள்ளே இருப்பாருன்னு தெரியலையே.