விமல் ஆளுங்க! ஹரி என்னை காப்பாத்து! குளியல் அறை சுவற்றில் ரத்த எழுத்து! தொழில் அதிபர் மனைவி மாயம்! சேலம் பீதி!

காணாமல் போன பெண்ணின் குளியலறையில் ரத்தத்தில் எழுதப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சின்னதிருப்பதி எனும் இடம் அமைந்துள்ளது. இங்க ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தமிழ்ச்செல்வி. தினமும் காலை கடைக்கு செல்லும் ஹரிஹரன் இரவு தாமதமாக வீட்டிற்கு வருவார். 

இதேபோன்று நேற்று காலையில் கடைக்கு சென்ற ஹரிஹரன் இரவு வீடு திரும்பினார். அவருடைய மனைவியை காணவில்லை என்று வீடு முழுவதும் தேடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஹாக்கி ஸ்டிக்கில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும் வீடு முழுவதும் ரத்தம் சிந்தியிருந்தது.

இதனை கண்டு ஹரிஹரன் பேரதிர்ச்சி அடைந்தார். பாத்ரூமுக்கு சென்று பார்த்த போது ரத்தத்தில் "விமல் ஆளுங்க!!! ஹரி என்னை காப்பாற்று" என்று எழுதப்பட்டிருந்தது. உடனடியாக ஹரிஹரன் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியோடு வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்.

ஹாக்கி ஸ்டிக்கில் ரத்தக்கறை படிந்திருந்ததால் தமிழ்ச்செல்வி கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர். விமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது சின்னத்திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.