கடந்த மாதம் முதல் 7 கட்டமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த இந்திய பங்கு சந்தை நிலவரம்! தேர்தல் முடிவுகளின் எதிரொலி!
இன்று காலை 8 மணியளவில் துவங்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக கட்சியானது தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தேசிய அளவில் மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் பாஜக காலை முதலே பாஜக தனிபெரும்பான்மையுடன் 325 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் விளைவாக காலை முதலே வேகமாக பங்கு சந்தை உயர்ந்தது. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. இது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது என்றே கூறாலாம்.
தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 12 புள்ளிகளை எட்டியது. இது வரலாறு காணாத அளவிற்கு வளர்ந்து உள்ளது.