ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவர்களை கதற விட்ட சீனியர் மாணவர்கள்! கல்லூரி முதலாம் ஆண்டில் ஏற்பட்ட விபரீதம்!

ஜூனியர் மாணவர்களை நிர்வாணப்படுத்தி சீனியர்கள் ராகிங் செய்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு வீரேந்திர சாய் டெக்னிக்கல் யூனிவர்சிட்டி என்ற புகழ்பெற்ற கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர்கள் ஜூனியர்களாக வரும் மாணவர்களை ராகிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ராகிங் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வெளியான வீடியோவில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேடையில் ஏறி நடனமாடுகின்றனர். அவர்கள் உடம்பில் ஒரு ஆடையை தவிர வேறு எதுவும் அணியவில்லை. இதனை கல்லூரி மாணவர்களே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவானது அம்மாநிலத்தில் கடும் போராட்டத்தை கிளப்பியுள்ளது. திறன்மேம்பாடு மற்றும் கல்வித்துறை அமைச்சர் இந்த வீடியோவில் உண்மை நிலையை குறித்து ஆராய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த கல்லூரியில் இதுபோன்ற ராகிங் நிகழ்வுகள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. கல்லூரி நிர்வாகமானது 10 மாணவர்களை டீ-பார் செய்து உத்தரவிட்டது. மேலும் உடனிருந்த 52 மாணவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.