மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்! செங்கோட்டையனின் அடுத்த அசத்தல் திட்டம்!

மரம் வளர்த்து பராமரிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு சார்பாக  நடைபெற்ற ஆசிரியர்களின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பேசியவதாவது:

 

பொறியியல் படித்தவர்கள் 80 லட்சம் பேர் இன்று இந்தியா முழுவதும் வேலையில்லாமல் உள்ளனர். 1,68,000 பேர் தமிழகத்தில் பொறியியல் முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கூறும் பட்சத்தில் அதை தமிழக அரசு தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும்.

 

256 பாடங்கள் பிரிவுகள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதை படித்தாலே போதும். எத்தகைய தேர்வாக இருந்தாலும், மாணவர்கள்  அதை எளிதில் வெல்லமுடியும் .

 

 மாணவர்கள் படிப்போடு சேர்த்து மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு சேர்த்து 12 மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.  .

 

இதனை தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசின் சார்பில் அயல்நாடுகளுக்கு குழுக்கள் அனுப்பி அங்குள்ள கல்வி முறை பற்றி அறியப்படுகிறது

 

தியரியாக அல்லாமல் , பிராக்டிகலாக பாடங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த உள்ளோம். ஆசிரியர் தேர்வில் தவறு, முறைகேடு நடந்திருப்பது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு இடங்களில் தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துகிறார்கள். அதேபோன்ற சோதனையே DPI வளாகத்திலும் நடைபெற்றுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறைக்கு கரும்புள்ளி என்பதில் உண்மை இல்லை.

 

   இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.