ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் வாங்குகிறோம்! ஒப்புக் கொண்ட ராஜலட்சுமி தம்பதி!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தற்போது சின்னத்திரையை தாண்டி , தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இனைந்து சினிமாவில் பாடிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


சமீபத்தில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிலளித்தது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. கச்சேரிகளில் பங்கேற்பதற்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்  என்ற கேள்விக்கு பதில் அளித்த  ராஜலக்ஷ்மி, சம்பளம் என்பது ஒருவர்  வாழ்க்கை நடத்துவதற்கு சம்பத்தப்பட்ட விஷயம்.  சினிமாவில் நடிக்கின்ற ஹீரோ, ஹீரோயின்கள் எவ்வளவு பணம்  வாங்குகிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை.

ஆனால்  எங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களிடம்  எவ்வளவு பணம்  வாங்குகிறீர்கள் என்ற கேள்விகளை எல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் இருவரும் இனைந்து இன்னிசை கச்சேரியில் பங்கு பெற 1.5 லட்சம் கேட்கிறோம். இதனை மறைக்காமல் நாங்கள் ஒளிவு மறைவின்றி கூறுகின்றோம். இந்த மொத்த பணமும் எங்களுக்கு மட்டும் கிடையாது. எங்களுடன் எங்களுக்காக வேலை செய்யும்  சக நாட்டுப்புற கலைஞர்களுக்காகவும் தான்  என அவர் கூறினார்.

சமீபத்தில்  புஸ்பவனம் குப்புசாமி அவர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்ற நாட்டுப்புற மக்கள்  இசையை சிலர் தற்போது தவறான வழிக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார். இதை பற்றி தங்களின் கருத்து என்ன என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த  செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி , நாட்டுப்புற இசை என்பது வெறும் கிராமிய பாடல்  பாடுவது மட்டும் அல்ல. சமூக அக்கறைகளை எங்களுடைய பாடல்களோடு இணைத்து ரசிகர்களை கவரும் வகையில் நாங்கள் எழுதி படுகிறோம். 

பழங்காலத்தில் வேலை செய்து விட்டு உடல் வலி  தெரியக்கூடாது என்பதற்காக பாடப்படும் பாட்டு தான் இக்காலத்தில் நாட்டுப்புற  இசையாக மாறி நிற்கிறது. அந்த நாட்டுப்புற கலையை யாரும் என்னால் தான்  நல்ல  நிலைக்கு வந்துள்ளது  என்று கூறமுடியாது எனவும் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி, புஷ்பவனம் குப்புசாமியின் கருத்துக்கு அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.