செம்பருத்தி சீரியல் நடிகைக்கு ரகசிய நிச்சயதார்த்தம்! பிப்ரவரியில் டும்டும்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஆந்திராவை சேர்ந்த பாரத நாயுடு.


மித்ரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் பாரத நாயுடு செம்பருத்தி சீரியலில் மிகவும் பிரபலமாக பேசப்படும் நடிகை ஆவர். இவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் இவர் அதே சீரியலை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் வசப்பட்டு உள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் இவர்களது திருமணம் மணமகன் பரத்துக்கு சொந்த ஊரான திருவண்ணாமலையில் நடை பெறப் போவதாக நடிகை பாரத நாயுடு கூறியுள்ளார். 


இவர்கள் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பாரதா திருமணத்திற்கு தேவையான பொருட்களையும் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்து விட்டாராம். 

செம்பருத்தி சீரியல் குடும்பம் பாரத நாயுடு மற்றும் பரத் ஆகிய இருவரின் திருமணத்தை எதிர் பார்த்து மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.