செம்பருத்தி சீரியல் நடிகை திடீர் திருமணம்! கார் டிரைவரை மணந்தார்! ஏன் தெரியுமா?

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியதிரை கொண்டிருக்கும் புகழ் அளவிற்கு சின்னத்திரையும் புகழ் பெற்று விளங்குகிறது.


அந்த வகையில் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக TRP பெற்ற சீரியல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் ஆதி என்னும் கார்த்திக் நடித்து வருகிறார். இவரை உமா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெனிஃபர் ஒருதலையாக காதலித்து வருவதாக கதையின் போக்கு அமைந்திருக்கும்.

ஜெனிபர் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் சரவணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் இந்த சீரியலுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர் .

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திடீர் என்று எவரும் எதிர்பாராத விதமாக எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த செய்தியை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் மணமகன் சரவணன் கார் டிரைவர். ஜெனிபருக்கு கார் டிரைவராக சரவணன் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சரவணன் மீது ஜெனிபர் காதல்வயப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சரவணன் – ஜெனிபர் திருமணம் உற்சாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. கார் டிரைவரை காதலித்து திருமணம் செய்த நடிகையை பலரும் பாராட்டி வருகின்றனர்.