இளமதி என்னிடம் திரும்பி வந்தால் போதும்..! தலித்தாக பிறந்தது என் தவறா? கதறும் செல்வன்!

தனது காதல் மனைவி இளமதி தன்னிடம் திரும்பி வந்தால் மட்டும் தனக்குபோதும் என்று அவரை சுயமரியாதை திருமணம் செய்த செல்வன் கதறி வருகிறார்.


காதல் திருமணம் செய்த இளமதி தற்போது தனது பெற்றோருடன் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதனால் காவல் நிலையத்திற்கு வந்திருந்த அவரது காதலர் செல்வனின் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் மனைவி பெற்றோருடன் சென்றது குறித்து செல்வன் மனம் திறந்துள்ளார்.

இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாகவே பழகினோம். என்னிடம் பலர் நெருங்கி பழகினாலும் நான் தலித் என்பதால் பாகுபாடு காட்டுவார்கள். ஆனால் இளமதி என்னிடம் அப்படி பழகவில்லை. அவர் எவ்வித பாகுபாடும் காட்டாமல் என்னிடம் பழகினார்.

இதனால் இருவரும் காதல் வயப்பட்டோம். இளமதி என்னை போலவே முற்போக்கு சிந்தனை உடையவராக இருந்தார். ஆனால் அவரது பெற்றோர் ஜாதிப் பற்று மிக்கவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் தான் அவர்களுக்கு தெரியாமல் இளமதியை அழைத்துச் சென்று திருமணம் செய்தேன். இப்போது ஜாதியை வைத்து எங்களை பிரித்துள்ளார்கள்.

நான் தலித்ததாக பிறந்தது நான் செய்த தவறா? என் மனைவி இளமதி என்னிடம் திரும்பி வந்தால் போதும் என்று கதறியுள்ளார் செல்வன். ஆனால் காவல் நிலையத்தில் வைத்து இளமதி பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறிவிட்டதால் அவர் அவரது தாயுடன் அனுப்பிவைக்கப்பட்டார். இதற்கிடையே இளமதியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செல்வன் நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.