ஜீவாவின் புதிய திரைப்படம் சீறு! ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படம் "சீறு". இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்த திரைப்படமானது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இயக்குனர் ரத்தின சிவா இந்த திரைப்படத்தை  இயக்கியுள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.  

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுக நாயகி  ரியா சுமன் நடித்துள்ளார். இந்த படத்திற்கான இசையை இசையமைப்பாளர் இமான் அமைத்துள்ளார். 

தற்போது இந்த திரைப்படமானது வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு நடிகர் ஜீவா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.