சீமான் என்ன ஜாதி? நாங்குநேரியில் நாம் தமிழரை சம்பவம் செய்த ஹரிநாடார் உடைத்த ரகசியம்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி தேர்தலில் சாதிய வாக்குகளை பயன்படுத்த எண்ணினார் என்று ஹரி நாடார் குற்றம்சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரியில் காமராஜர் நகரிலும் இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்த 2 தொகுதிகளிலும் தொடக்கத்திலிருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் பெற்றார். 

மிகவும் சுவாரஸ்யமானதாக நாம் தமிழர் கட்சியை காட்டிலும் நாங்குநேரியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஹரிநாடார் அதிகமான வாக்குகளை பெற்றார். 4 ஆயிரத்து 243 வாக்குகளை பெற்று ஹரிநாடார் 3-வது இடத்தை பெற்றார். நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தையே பெற முடிந்தது. இந்நிலையில், இதுகுறித்து ஹரிநாடார் அவர்கள் பேசுகையில், "6 மாதங்கள் முன்புதான் கட்சியை தொடங்கினோம். ஆளுங்கட்சி மற்றும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சிக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிடும். எங்கள் சமூக மக்கள் அதிகமாக இருந்த இடத்தில் மட்டுமே பிரச்சாரம் செய்தோம். எங்கள் சமூக மக்கள் எங்களை அபரிமிதமாக நம்புகின்றனர்" என்று கூறினார்.

தேவர் பிறந்தநாளன்று எங்கள் கட்சி தலைவரும், சீமானும் உரையாடிய போது "நாடார் சமூக வேட்பாளரை களம் இறக்க போவதாக அறிவித்தார். நான் உட்பட அனைத்து வேட்பாளர்களும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களாவர்" என்று கூறியுள்ளார்.

பலத்த தோல்வியை சந்தித்த நாம் தமிழர் கட்சி கூறுகையில், " 2 திராவிடக் கட்சிகளுமே பணத்தை வாரி இரைத்தார்கள். அதனால் ஜனநாயகம் அழிந்துவிட்டது" என்று கூறினார். 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.