"ஆப்பரேஷன் ஃபெயிலியர்" எச். ராஜாவை சூசகமாக கிண்டலடித்த சீமான்..!

நெல்லைக்கண்ணன் சிறையில் இருந்து விடுதலை ஆனதை அடுத்து நாம் தமிழர் கட்சி சீமான் ஆபரேஷன் ஃபெயிலியர் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜாவை சூசகமாக கிண்டலடித்து பதிவிட்டிருக்கிறார்.


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 29ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது அவர் பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம் ஆகிய அனைவரையும் கண்டபடி தாக்கி பேசினார். அதுமட்டுமில்லாமல் . அவர்களை ஒருமையில் பேசி சட்ட திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். 

நெல்லைக்கண்ணனின் இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள பாஜகவினரால் போராட்டம் நிகழ்ந்தது. அவரை கைது செய்து ஆகவேண்டும் எனவும் அனைவரும் கூறிவந்தனர். இதனை அடுத்து நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். நெல்லைக்கண்ணன் கைதான ஒரு சில நிமிடங்களிலேயே எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஆப்பரேஷன் சக்சஸ்" என்று ட்வீட் செய்திருந்தார். அதாவது நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதை உற்சாகமாக அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.


நெல்லைக்கண்ணனின் கைதை அடுத்து தமிழகம் முழுவதிலும் இருக்கும் மற்ற கட்சியினர் தங்களுடைய கருத்துக்களை கூறிய வண்ணம் இருந்தனர் . மேலும் நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் கூட இல்லையா என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இன்னிலையில் சிறைவாசம் பெற்றிருந்த நெல்லை கண்ணன் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.  

 

இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , "அப்பா நெல்லை கண்ணன் பிணையில் இருந்து விடுதலை.. ஆபரேஷன் ஃபெய்லியர் " என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 


சீமான் பதிவிட்டுள்ள இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ராஜாவை தான் நாம் தமிழர் கட்சி சீமான் சூசகமாக கிண்டலடித்துள்ளார் எனவும் பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.