ஆளுமை இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த்! சீமான் ஆவேசம்!

கலைஞர் மற்றும் ஜெயலலிதா அரசியலில் இருக்கும் போது அரசியலில் எட்டிப்பார்க்காத நடிகர் ரஜினிகாந்த் அவர்களை ஆளுமை இல்லாதவர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் இன்னும் நல்ல ஆளுமைக்கான வெற்றிடம் நிலவி வருகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த கருத்து தெரிவித்த கருத்தை கேட்ட உடனேயே திமுக மற்றும் அதிமுக சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

திமுகவின் துரைமுருகன் அவர்கள் தமிழகத்திற்கான வெற்றிடத்தை மு.க ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பி விட்டார் எனவும், ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கனவே வெற்றிடத்தை நிரப்பி விட்டார்கள் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அரசியலில் இருந்த காலத்திலேயே ரஜினி அரசியலுக்கு வராததால் அவருக்குத்தான் ஆளுமை கிடையாது எனவும் அவர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். 

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறியதில் இருந்தே சீமான் அவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.