சீமானை கைலாசா நாட்டில் அனுமதிக்கப்போவதில்லை..! நித்தியானந்தா அதிரடி..!

கைலாசம் நாட்டிற்கு சென்று விடுவேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதற்கு நித்யானந்தா பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசானது இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவின் விளைவானது தமிழ்நாடு, அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், "எனக்கு குடியுரிமை ரத்தானால் எந்த கவலையும் இல்லை. நித்யானந்தா புதிதாக தொடங்கியிருக்கும் கைலாசம் நாட்டிற்கு சென்று விடுவேன். எங்கள் அதிபர் நித்யானந்தா எங்களுக்கு உள்ளார்" என்று கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நித்யானந்தா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "கைலாசம் ஒன்றும் யார் வருவதற்கும் திறந்து வைக்கப்படவில்லை. அரசியல் துறந்து திருவண்ணாமலை பகுதியில் தீபம் ஏற்றி, மதுரை மீனாட்சி அம்மனிடம் ஆசிர்வாதம் பெற்றால் சீமானை கைலாசத்தில் சேர்த்துக் கொள்வேன். தமிழ்நாட்டு அரசியல் பிரிவினைவாதிகளுக்கு கைலாசத்தில் இடமில்லை" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த ட்விட்டர் கணக்கு நித்தியானந்தா கூறும் கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வமானதா என்று தெரியவில்லை.