60 வயசு அப்பன் கிழவன்! 70 வயசு ரஜினி தலைவன்! விளாசிய சீமான்!

ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் மக்களின் முதுகுத் தோலை உரிப்பேன் என்று சீமான் கூறியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பகுதிகளுக்கு வருகிற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மிகவும் ஆவேசமாக உரையாற்றினார். அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக வாக்களித்த 18,00,000 மக்கள் மட்டுமே தமிழர்கள் என்றும், ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் மக்களின் மரத்தில் கட்டிவைத்து பனை மட்டையால் அடித்து முதுகுத்தோலை உரிக்க போவதாக கூறினார். மேலும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் மக்களை தமிங்கிளர்கள் என்றும் தங்கிலீஷ்காரர்கள் என்றும் வகைப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், ராணுவத்தில் கடுமையாக உழைத்து ஓய்வு பெறும் 60 வயது அதிகாரிகளுக்கு வாட்ச்மேன் வேலை அளிக்கப்படுவதாக வேதனைப்பட்டார். அதேநேரத்தில் சினிமா துறையில் ஆண்டு அனுபவித்து மதிப்பிழந்த பிறகு 70 வயதில் வருபவர்களை முதலமைச்சராக வேண்டும் என்று உசுப்பேற்றி விடும் இனத்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக வருத்தப்பட்டார். 

மறைமுகமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தாக்கி அவர் இதனை கூறினார். மேலும் சினிமாவில் சண்டை போட்டு, வில்லன்களை அடித்து உதைப்பது போல் எல்லைகளுக்கு சென்று போரிட வேண்டியதுதானே என்று வினவினார்.

தமிழ் மொழி பெயர்களை படத்திற்கு சூட்டாத இயக்குநர்களை சீமான் கடிந்துக்கொண்டார். மேலும், "வீரத்தில கட்டபொம்மன்; சூரத்தில ஊமதுரை; ரோஷத்தில தேசிங்கு ராஜா;" என்ற பாடலை பாடிய பிறகு சீமான், பாடல் வரிகளில் கூறப்பட்ட யாவரும் தமிழர்கள் அல்ல என்று கடிந்து கொண்டார். மேலும் வீரத்திற்கும் சூரத்திருக்கும் பெயர்போன தமிழர்கள் இல்லையா என்று வருத்தப்பட்டார்.

சீமானின் இந்த பேச்சானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.