ஒரு வழியாக அப்பா ஆனார் சீமான்! என்ன குழந்தை தெரியுமா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பா ஆகியுள்ளார்.


சீமான் கடந்த 2013ம் ஆண்டு கயல் விழி என்னும் பெண்ணைதிருமணம் செய்து கொண்டார். கயல் விழி முன்னாள் சபாநாயகரும் அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மறைந்த காளிமுத்துவின் மகள் ஆவார். திருமணம் நடைபெற்று சுமார் 5 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் குழந்தை வரம் இல்லாமல் இருந்தது. இதனை வைத்து சீமானின் அரசியல் எதிரிகள் கூட கிண்டல் செய்து வந்தனர்.

   மேலும் சமூக வலைதளங்களிலும் குறிப்பிட்ட ஒரு கட்சியினர் சீமானுக்கு  குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி கேலி செய்து வந்தனர். மேலும் சீமான் பேசும் வீரம் எல்லாம் வெளியில் தான் வீட்டுக்குள் ஒன்றும் இல்லை என்கிற ரீதியில் வந்த மோசமான விமர்சனங்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று சீமானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் சீமான் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டள்ளார். அந்த புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் சீமான் உறவினர்களும் கூட இனிப்புகள் வழங்கி தங்கள் வீட்டுக்கு வந்த புது வரவை வரவேற்று மகிழ்கின்றனர். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று சீமான் தீவிர யோசனையில் உள்ளாராம்.

   ஆண் குழந்தை என்பதால் அவரது தலைவன் பிரபாகரன் பெயரைவே சீமான் தனது குழந்தைக்கும் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று பலரும் கேட்டு வரும் நிலையில் விரைவில் தனது குழந்தையின் பெயரை தெரிவிக்க உள்ளதாக சீமான் அவர்களிடம் கூறி வருகிறார்.