ஹாஸ்பிடலில் படுத்த படுக்கை..! 52 வயது மூதாட்டியிடம் தகாத செயல்! வாட்ச்மேன் அரங்கேற்றிய படுபாதகம்! நாகர்கோவில் அதிர்ச்சி!

மருத்துவமனையில் தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்காக காவலாளி கைது செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் காஞ்சாம்பாரம் என்ற இடத்தை சேர்ந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு துணையாக அவனுடைய தாயார் மருத்துவமனையில் தங்கியிருந்தார். தாயாரின் வயது 52.

இந்நிலையில் அங்கு ஒப்பந்த காவலாளியான ஆனந்த் என்பவர் சிறுவனின் தாயாரிடம் அடிக்கடி பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளார். நேற்று நள்ளிரவில் இதேபோன்று நடந்தபோது சிறுவனின் தாயார் கத்திக்கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக பயந்துபோன ஆனந்த் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த ஆசாரிப்பள்ளம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஆனந்த் கட்டான்விலை பகுதியை சேர்ந்தவர் என்பதும் பத்மாவதி ஏஜென்சி சென்ற தனியார் ஒப்பந்ததார நிறுவனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

காவல்துறையினர் ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னர் காவலாளி சுவிக் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது ஆசாரிபள்ளம் அரசு பொது மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.