இரவு பகல் பாராமல் போராடும் மருத்துவர்கள்..! தமிழகத்தில் கொரோனாவுக்கு 2வது நபர் குணமடைந்தார்..!

டெல்லியில் இருந்து கொரோனாவுடன் தமிழகத்திற்கு வந்த நபர் தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த நோயில் இருந்து குணமாகியுள்ளார்.


ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்த இளைஞர் ஒருவர் கொரோனாவால் முதன் முதலில் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை மூலம் அவர் குணமான நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த இளைஞர் ஒருவர் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

14 நாட்கள் தொடர் சிகிச்சை முடிந்த நிலையில் அந்த டெல்லி இளைஞருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தற்போது இல்லை என்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து டெல்லி நபரை வீட்டிற்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். 

தொடர்ந்து இரவு பகல் பாராமல் கொரோனா பாதித்த இளைஞருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அளித்த சிகிச்சையே தமிழகத்தில் 2வது நபர் இந்த கொடிய நோய்க்கு குணமாக காரணமாகியுள்ளது.