எம்பி தேர்தலில் மச்சினிச்சிக்கு சீட் மறுப்பு! அதிர்ச்சியில் செங்கோட்டையன்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட செங்கோட்டையனின் மச்சி நிச்சயம் தற்போதைய திருப்பூர் எம்பியுமான சத்யபாமாவிற்கு அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2 நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் செய்து வந்தனர்.

நேர்காணல் முடிந்த நிலையில் யார் யாருக்கு என்னென்ன தொகுதி என்கிற நிலவரமும் அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டது.

அந்த வகையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்பிக்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு செங்கோட்டையனின் மச்சினிச்சி சத்தியபாமா வெற்றி பெற்றார். இந்த முறையும் திருப்பூர் தொகுதியில் போட்டியிட சத்தியபாமா விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நேர்காணலிலும் சத்தியபாமா கலந்து கொண்டார். நேர்காணலின் போதே சத்தியபாமாவை பார்த்த முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர் கொண்டு வந்திருந்த பைலை மற்றும் வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்துவிட்டனர்.

இதனால் சத்யபாமா மிகவும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறுகிறார்கள். தன்னிடம் நேர்காணலை செய்யாத நிலையில் தன்னை எப்படி வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று சத்யபாமா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் சத்யபாமாவிற்கு இந்த முறை திருப்பூரில் சீட் இல்லை என்றே அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் செங்கோட்டையனின் மச்சினிச்சிக்கு அதிமுக வாய்ப்பும் மறுத்துள்ளது.