சீட் கிடைக்காத பீட்டர் அல்போன்ஸ் - ராகுலுக்கு அட்வைஸ்! டென்ஷனில் காங்கிரஸார் !!

நெல்லையில் தனக்கு சீட் கிடைக்கும் என்று பீட்டர் அல்போன்ஸ் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால், தொகுதி தி.மு.க. வசம் போய்விட்டது. அதனால் அல்போன்ஸ் அப்செட்.


நொந்து நூடுல்ஸ் ஆன பீட்டர் அல்போன்ஸ், தன்னுடைய விரக்தியைக் காட்டாமல் ராகுல் காந்திக்கு வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அவர் இன்று ராகுல் காந்திக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் இதுதான்.

‘’தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்கள் நியமனத்தில் ஐந்து பெரும்பான்மை சமூகத்தினருக்கு ஒருவர் வீதம் ஐந்து பேரை நியமனம் செய்தீர்கள். இப்போது பாராளுமன்றத் தேர்தலின்போது நமது இயக்கத்திற்கான ஒன்பது இடங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கும் இடம் கொடுக்கப்படவேண்டும்.

 சிறுபான்மை என்றால் மத சிறுபான்மை, மொழி சிறுபான்மை மற்றும் சமுக சிறுபான்மை சமூகங்களை சார்ந்த தகுதியான காங்கிரஸ் நண்பர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்பபு கொடுக்கப்படவேண்டும். ஒரு கிறிஸ்தவர் ஒரு இஸ்லாமியர் தெலுங்கு  தாய்மொழியாக கொண்ட ஒருவர் மற்றும் பெரும்பான்மை சமூகங்களை சாராத மற்ற சமூகங்களை சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

 பெரும்பான்மை சமுகங்களுடைய குரலை ஒலிக்க அந்த சமுக மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸை விட்டால் வேறு  வழி இல்லை. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி சிறுபான்மை மக்களே. கன்னியாகுமரி தொகுதி ஓரு கிறிஸ்தவ காங்கிரஸ் நண்பருக்கு வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

அங்கு மட்டும்தான் ஒரு சிறுபான்மை கிறிஸ்தவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியும். நான் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக  வேட்பாளர்கள் தெரிவு செய்கிறபோது எனது கோரிக்கையினை பரிசீலிக்க அன்புடன் வேண்டுகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.

அட, நேரடியாவே கேளு பீட்டர் என்று காங்கிரஸார் கொந்தளிக்கிறார்கள்.