ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோதுகிறார் சீமான்….? டென்ஷனில் தி.மு.க.

சீமானை கிண்டல் செய்வதுதான் தி.மு.க. ஐ.டி. விங்கின் முக்கியமான வேலையே. சீமான் என்ன பேசினாலும், அதை ஒரு நகைச்சுவையாக மாற்றி ஏகப்பட்ட மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்க விடுவார்கள். அதனால், தி.மு.க.வுக்கும் சீமானுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.


அதனால் ஏற்கனவே பேசியிருந்த சீமான், ‘ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும்படி பலரும் கூறிவருகின்றனர், அதை நான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார் நாம் தமிழர் சீமான். அந்த யோசனையை இன்று முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

ஆம், ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று அறிவித்து அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறார் இதுகுறித்து அவர் இன்று அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் நாம் தமிழர் உறவுகள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். நான் போட்டியிடவிருக்கும் தொகுதியை மரியாதைக்குரிய ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் முடிவுசெய்யவேண்டும்.அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியில் நானும் போட்டியிடவிருக்கிறேன். இனி திமுக-வுக்கு மாற்று அதிமுக அல்ல; திமுக-வுக்கு மாற்று நாம் தமிழர் தான் என்பதை உருவாக்குவோம்! திமுகவா? நாம் தமிழரா? திராவிடரா தமிழரா என்று மோதிப் பார்த்துவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்.