எலும்புகளையும் தின்று செரிமானம் செய்யும் விநோத உயிரினம்! முதல் முறையாக கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?

ஆழ்கடலில் அபூர்வ உயிரினம் இருப்பதை மெக்சிகோ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோ நாட்டின் ஆழ்கடல் ஆய்வாளர்கள் ஒரு வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டனர். 36 கிலோ எடைகொண்ட 3 இறந்த முதலைகளை 2 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆழ்கடல் பரப்பில் உரிய பாதுகாப்புக்கு மத்தியில் வைத்திருந்தனர். 

51 நாட்களுக்கு பிறகு மிகவும் புதிதான ரோபோக்களின் மூலம் அவற்றை ஆய்வு செய்ய தொடங்கினர். ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, முதல் முதலையின் உடலை கால்பந்து போன்ற உருண்டை ஆழமான புழுக்கள் இன்று அரித்து கொண்டிருந்தன.


2-வது முதலையின் உடலில் வெறும் மண்டையோடு மற்றும் எலும்புகளே மிச்சமாக இருந்தன. 3-வது முதலை வைக்கப்பட்டிருந்த இடம் மிகவும் வெறிச்சோடி காணப்பட்டது. போதிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தாலும் முதலையின் உடலை கண்டுபிடிக்க இயலவில்லை. இருட்டான ஆழ்கடலில் கார்பன் போன்ற இப்பொருட்களை விளங்கும் உயிரினங்கள் முதலையை முழுவதுமாக சாப்பிட்டு விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவானது அவர்களை பெரிய அளவிற்கு ஆச்சரியப்படுத்தியுள்ளது.