வரும் திங்கள் முதல் 9 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை! அரசின் இனிப்பான அறிவிப்பு!

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பொங்கலுக்கு 9 நாட்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 9 நாட்கள் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கிடைத்துள்ளது‌.

இதனிடையே புதுச்சேரியிலும் இதுபோன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிபந்தனை எழுந்தது. நிபந்தனையின் பேரில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையும் 13-ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

13-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதியன்று பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. இன்று முதல் அடுத்த சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்காது.