பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - பலத்த காயத்தில் 20 குழந்தைகள் - திண்டுக்கல் பரபரப்பு

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலத்த காயமடைந்த சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் முள்ளிப்பாடி புனித வள்ளார் என்னும் பள்ளி அமைந்துள்ளது. காலையில் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி வேன் மேலப்பாடியூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. எதிரியே ஒரு வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்ததால் வழி விடுவதற்காக ஓட்டுநர் வேனை சாலையோரம் திருப்பினார். 

அப்போது எதிர்பாராவிதமாக வேன் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்தது. வேனில் சுமார் 40 குழந்தைகள் பயணித்து வந்தனர். 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்களை திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்த விசாரணையை மேலப்பாளையூர் காவல்துறையினர் துரிதமாக செய்து வருகின்றனர்.