கூச்சப்படாம பக்கத்துல வா! நெருக்கமா வா! வகுப்பறையில் மாணவிகளிடம் ஆசிரியர் செய்த அசிங்கம்!

6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஆசிரியர்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்திருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லக்கோடு எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள கல்பாறை பொற்றையில் கன்கார்டியா லுத்தரன் என்னும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த டேவிட்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  ஆறாம் வகுப்பிற்கு தொகுப்பாசிரியராக டேவிட் ராஜ் உள்ளார்.

இவர் தன் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் பல அச்சுறுத்தல்களை அளித்துள்ளார். கூச்சப்படாமல் என் அருகே வாருங்கள் என அழைத்து ஆசிரியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு 3 பெண்களை துன்புறுத்திய போது அவர்களின் பெற்றோர்கள் கண்டுள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகள் நல காப்பக எண்னான 1098 அழைத்து புகார் அளித்துள்ளனர்.

குழந்தை நல காப்பகத்தின் அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விசாரணை நடத்த சென்றனர். அவ்விடத்தில் பெற்றோர் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினரே கண்டவுடன் டேவிட்ராஜ் தப்பிக்க முயன்றார்.

ஆனால் காவல்துறையினர் டேவிட்ராஜா வளைத்துப்பிடித்தனர். பின்னர் போஸ்கோ சட்டத்தின்கீழ் டேவிட்ராஜை கைது செய்தனர். கன்னியாகுமரி கிரிமினல் நீதிமன்றத்தில் டேவிட்ராஜை ஆஜர்படுத்தினர். நீதிபதி டேவிட்ராஜை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவமானது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.