இரவில் வைஷ்னவா கல்லூரி வகுப்பறையில் ரகசியமாக தங்கிய ஆசிரியை! காலையில் ரத்தக் காயத்துடன் சடலமாக தொங்கிய பயங்கரம்!

அரசுப்பள்ளி ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பெரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹரி சாந்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஐந்தாண்டுகளாக அரும்பாக்கத்தில் உள்ள டிடி வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அதன் பின்னர் அரசு வேலை கிடைப்பது அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக இடம்பெயர்ந்தார்.

கல்லூரியை விட்டுச்சென்ற பின்னரும் இவர் கல்லூரிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று மதியம் இவர் கல்லூரிக்கு வந்து தன்னுடைய நண்பர்களை சந்தித்து பேசி வந்துள்ளார். பேராசிரியர் நடராஜன் என்பவரிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி நேரம் முடிந்த பின்னும் அவர் கல்லூரியை விட்டு செல்லாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

முதல் தளத்தில் உள்ள தெலுங்கு வகுப்பறைக்கு சென்ற இவர், தான் அணிந்திருந்த துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறுநாள் காலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றபோது ஹரிசாந்தி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய கையில் கத்தி காயங்கள் ஏற்பட்டிருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.