பொங்கல் திருவிழா! பல்லாயிரம் நோட்டு புத்தகங்களை வைத்து உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் உருவம்! எங்கு தெரியுமா?

கோவை கணபதி, மணியகாரம்பாளையம் பகுதியிலுள்ள, கேம்போர்டு பள்ளி மாணவர்கள் 22 ஆயிரத்து 741 நோட்டு புத்தகங்களை வைத்து பிரமாண்ட திருவள்ளுவர் உருவத்தை வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.


தமிழர் திருநாளாம் பொங்கல் விழா. பொங்கல் விழாவை தமிழர்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுவது வழக்கம் இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதோடு திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் நன்றி கூறுவது நம்முடைய வழக்கமாகும். அந்தவகையில் கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியிலுள்ள கேம் போட்டு பள்ளி மாணவர்கள் திருவள்ளுவருக்கு நன்றி கூறும் விதமாக புதிய சாதனையைப் படைத்துள்ளனர். 

அதாவது இந்த பள்ளி மாணவர்கள் 22,741 எண்ணிக்கை கொண்ட நோட்டு புத்தகங்களை கொண்டு 120 அடி அகலமும், 100 அடி நீளமும் கொண்ட திருவள்ளுவர் உருவத்தை இரண்டு மணி நேரத்தில் உருவாக்கி புதிய சாதனையை செய்து உள்ளனர். இதற்கு முன்பாக 720 அடியில் மிகப்பெரிய திருவள்ளுவரை உருவாக்கி அபுதாபியில் ஒரு நிறுவனம் சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த பள்ளி மாணவர்கள் இணைந்து அந்த சாதனையை முறியடித்துள்ளனர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.