இரவு 11.30 மணிக்கு படுக்கை அறைக்கு உறங்கச் சென்ற 19 வயது இளம் பெண்! அதிகாலையில் ஜன்னல் வழியாக தந்தை கண்ட காட்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வீட்டிலிருந்த தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்தூரில் வசித்து வருபவர் சங்கர் யாதவ். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள். இவரது மூத்த மகள் பெயர் ஜெயஸ்ரீ (வயது 19). இவர் அருகில் இருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜெயஸ்ரீ தன்னுடைய குடும்பத்தினருடன் பேசிவிட்டு சுமார் 11:30 மணி அளவில் தன்னுடைய அறைக்கு சென்று இருக்கிறார். 

மறுநாள் காலை வெகுநேரமாகியும் ஜெய்ஸ்ரீ வெளியே வராததால் அறையின் கதவை தட்டி பார்த்துள்ளனர். வெகு நேரமாகியும் கதவை ஜெயஸ்ரீ திறக்காததால் அவரது தந்தை அச்சமடைந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டின் அறையில் அருகில் இருக்கும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார். அப்படிப் பார்த்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதாவது அவரது மகள் ஜெயஸ்ரீ அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து உறைந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெய்ஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட அறையை போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஜெய்ஸ்ரீ தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், அப்பாவுக்கு, உன் மனைவியையும் மகளையும் எனக்கு பிடிக்கவில்லை. 

மேலும் வீட்டில் எனக்கு யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. நீங்கள் யாரும் என்னை விரும்புவதும் இல்லை. இதனை அடுத்து தாய் மற்றும் சகோதரி தான் என்னுடைய மரணத்திற்கு காரணம் என்று ஜெயஸ்ரீ அந்த கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இதனையடுத்து போலீசார் ஜெயஸ்ரீயின் தாய் மற்றும் சகோதரியைப் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.