நட்ட நடு ரோடு! துளியும் பயமில்லை! யூனிபார்மில் மாணவி செய்த செயல்! வைரல் வீடியோ!

எந்தவித தயக்கமுமின்றி பள்ளி மாணவி ஒருவர் பல்டி அடித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில நாட்களாகவே மாணவியொருவர் பல்டி அடிப்பது போன்ற வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவி எந்த வித தயக்கமும் இன்றி பள்ளிக்கு செல்லும் வழியில் பல்டி அடித்துள்ளார். ஆனால் அவர் எந்த பள்ளியில் சேர்ந்தது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை.

நாட்டின் மூலை முடுக்குகளிலும் இந்த வீடியோ பரவியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அந்த பெண்ணுக்கு உதவ தயார் என்று கூறியுள்ளார். இதுபோன்ற திறமைகளை வெளிக்கொணர்வதே மத்திய அரசின் குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் புகழான நாடியா அந்த மாணவியை பாராட்டியுள்ளார். வருங்கால ஜிம்னாஸ்டிக் புகழ் இன்றும் அந்த பெண்ணை வர்ணித்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் பலர் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.