சாதாரண காய்ச்சல்னு தான் நினைச்சோம்..! மூத்த மகள் பலி..! இளைய மகள் உயிருக்கு போராட்டம்! கதறும் பெற்றோர்! குடியாத்தம் சோகம்!

பள்ளி மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகிய செய்தியாளர்கள் வேலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட மேல்ரங்கசமுத்திரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அறிவரசன். இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா. இத்தம்பதியினருக்கு  புவியரசு என்ற 13 வயது பெண்ணும், கவிதா என்ற 11 வயது பெண்ணும் என 2 மகள்கள் உள்ளனர்.

இருவரும் வேலூர் பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளியில் இருவரும் 8 மற்றும் 7-ஆம் வகுப்புகளில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இருவரும் காய்ச்சலால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பெற்றோர் முதலில் அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் காய்ச்சல் குறையாததால் அவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திவ்யா அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில் இறந்துவிட்டார். மேலும் புவியரசி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். திவ்யா வைரஸ் காய்ச்சலால் இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், குடியாத்தம் தாசில்தார் டி.பி.சாந்தி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காமராஜ், நகராட்சி ஆணையாளர் எச்.ரமே‌‌ஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமே‌‌ஷ்குமார், டாக்டர்கள் விமல்குமார், சிந்து, சவுமியா ஆகியோர் மேல்ரங்கசமுத்திரம் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் கிராமத்து மக்களிடையே சுகாதார விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினர். பின்னர் சகோதரிகள் பயின்று வாங்க பள்ளிக்கு சென்று சுகாதார சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் சுகாதார அறிவுரைகளை வழங்கினர். 

இந்த சம்பவமானது குடியாத்தத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.