பிளஸ் ஒன்னுக்கு ரூ.3 லட்சம் கட்டணம்! நாமக்கல் க்ரீன் பார்க் பள்ளிக்குள் புகுந்த ஐடி அதிகாரிகள்!

பிரபல மேல்நிலைப்பள்ளியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபடுவது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் போதுப்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதி குட்பட்ட போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன்கீழ் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. 

இந்நிலையில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் பயிற்சி முழுவதற்கும் 1.75 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வருமான வரித்துறையினர் பள்ளி மற்றும் நீட் தேர்வு மையங்களில் சோதனை நடைபெற்றது. இந்த பள்ளியின் தாளாளரான சரவணன் மற்றும் பிற இயக்குநர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு 10 மணிமுதல் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மீண்டும் இன்று காலையிலிருந்து சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.