அப்பாவின் பார்க்க கூடாததை பார்த்த 14 வயது சிறுவன்..! அதையே 9 வயது சிறுமியிடம் செய்து பகீர் சம்பவம்! புதுக்கோட்டை அதிர்ச்சி!

திருச்சியில் தந்தையின் செல்போனில் தவறான வீடியோக்களை பார்த்து அதே மாதிரி சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து அவளை கொலை செய்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கிருஷ்ண சமுத்திரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராஜாங்கம் மற்றும் லலிதா தம்பதியினர் தங்களுடைய குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ராஜாங்கம் அந்தப் பகுதியில் கட்டிட வேலையை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு (கீதா பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். கீதா அருகில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் மல்லிப்பூ தோட்டத்தில் கீதா ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த சிறுமி யின் மண்டையோடு பலமாகத் தாக்கப்பட்டு உள்ளதால் மிகுந்த ரத்தம் வெளியேறி உள்ளது. ஆகையால் அவரை காப்பாற்றுவது சற்று கடினம் என்று கூறியிருக்கின்றனர். அந்த சிறுமி கீதா பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த சிறுமியை தாக்கியது யார் என்று பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுள்ளது. கீதா ரத்தவெள்ளத்தில் கிடந்த இடத்திற்கு அருகில் சட்டை துணி ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனை வைத்து போலீசார் தங்களுடைய விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் 14 வயது மிக்க ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவனை போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின்போது ஜீவா முன்னுக்கு பின் முரணாக போலீசாருக்கு பதிலளித்திருக்கிறார். 

இதனால் போலீசாருக்கு ஜீவாவின் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. பின்னர் சிறுவன் ஜீவா பல திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் கூறியிருக்கிறான். அதாவது சம்பவ தினத்தன்று ஜீவா மல்லிகைப்பூ தோட்டத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தந்தையின் செல்போனில் தவறான வீடியோக்களை பார்த்து வந்திருக்கிறான். இந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாகவே ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீதா, ஜீவா தவறான வீடியோ படங்களை பார்ப்பதை பார்த்து விட்டார். இதனைத்தொடர்ந்து ஜீவா அந்த வீடியோவில் இருக்கும் மாதிரி சிறுமி கீதாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். 

சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி அவரது தந்தையிடம் நடந்ததை கூறி விடுவார் என்ற பயத்தில் சிறுவன் ஜீவா அருகில் இருந்த கல்லை கொண்டு இந்த சிறுமியின் தலையில் ஐந்தாறு முறை பலமாகத் தாக்கி இருக்கிறான். இதனையடுத்து சிறுமி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுவன் ஜீவா அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டான். பின்னர் அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை சிறுவன் விசாரணையின்போது போலீசாரிடம் கூறியிருக்கிறான். இதனையடுத்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.