உன் உள்ளாடை சைஸ் என்ன? தலைமை ஆசிரியர் கேட்ட விபரீத கேள்வி! கதறி அழுத பள்ளி மாணவிகள்!

தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமான கேள்விகள் கேட்ட மற்றும் தவறாக நடந்துகொண்ட தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கம்மம் மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சில மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரான 52 வயது சங்கர் ரெட்டி தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்தனர்.  

அதன் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி போலீசார் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டார்.  

இந்தக் குழு மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணை நடத்தியத- அப்போது தலைமை ஆசிரியர் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக மாணவிகள் கூறினர். மேலும் மார்பகங்களின் அளவு என்ன, பின்னழகின் அளவு என்ன, உள்ளாடைகளின் சைஸ் என்ன போன்ற கேள்விகளை தலைமை ஆசிரியர் கேட்பதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர்.

விசாரணையின் போது பேச முடியாமல் சில மாணவிகள் கதறி அழுதுள்ளனர். இதனை அடுத்து தலைமை ஆசிரியர் சங்கர் ரெட்டி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான சங்கர் ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.  

இதனிடையே அவரை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தலைமை ஆசிரியர் சங்கர் ரெட்டி கடந்த 2015-ஆம் ஆண்டும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இதனிடையே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு பள்ளியின் நடன ஆசிரியர் 2 வகுப்பு மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து பள்ளி வளாகத்தில் ஆவேசமாகத் திரண்ட ஏராளமான பெற்றோர் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது.இதையடுத்து போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். 

மாணவியிடம் ஆசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி நடந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர் .