ஆகஸ்ட் 3ந் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு..! முதலமைச்சர் அறிவிப்பு..! ஏற்பாடுகளும் தயார்!

வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.


உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாகக் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த வண்ணம் உள்ளது. தற்போது நம் நாட்டில் நான்காவது கட்ட ஊரடங்கு உத்தரவு வழக்கத்தில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட உடனேயே தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் ஆகிய அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 இதுவரை ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2474 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னுடைய அமைச்சரவையை நேற்றைய தினம் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிக் கூடங்கள் பற்றி தீவிர ஆலோசனை நடைபெற்றது.

இதன் முடிவாக வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான உரிய ஏற்பாடுகளையும் சரியாக செய்து தருமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.