ஏய் என்ன பண்றீங்க? காதல் ஜோடி உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த சுந்தரி அக்காவுக்கு ஏற்பட்ட பயங்கரம்! கொடைக்கானல் திகுதிகு!

காதலுக்கு இடையூறாக இருந்தது பெண்ணொருவரை மாணவி கொலை செய்து இருக்கும் சம்பவமானது கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுந்தரி. சுந்தரியின் வயது 31. இத்தம்பதியினருக்கு 11 வயதில் மகள் உள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகள் கேசவனுடன் வசித்து வருகிறார்.

சுந்தரி முருகன் என்பவரது வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்தார். முருகன் சென்னையில் வசிப்பதால் சுந்தரி மட்டும் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். 23-ஆம் தேதியன்று சுந்தரி இறந்திருப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் தகவல் அளித்த ராதா என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ராதா பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். "நான் திண்டுக்கல்லில் ஒரு பள்ளியில் படிக்கிறேன். என்னுடன் ராஜா என்பவர் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தோம். தனிமையில் சந்திப்பதற்காக சுந்தரியின் வீட்டில் தங்கினோம். அப்போது சுந்தரி எங்களை பார்த்து விட்டார். அவர் இதுகுறித்து எங்களுடைய வீட்டில் கூறுவதாக பயமுறுத்தினார். 

உடனடியாக நாங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே செல்வது போன்று சென்றோம். பிறகு வீட்டிற்கு உள்ளே சென்று துப்பட்டாவால் சுந்தரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் ராஜா திண்டுக்கல்லுக்கு சென்று தலைமறைவாகி விட்டார். இரவு சுந்தரியின் சடலத்தோடு தங்கி மறுநாளில் தகவல் தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் ராதாவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதித்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள ராஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.