கிரிவலத்தின் போது கடவுளின் ரூபத்தில் இளைஞர்கள் தனக்கு உதவி செய்ததாக பிரபல பாடகி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேரத்தில் நான் தப்பிக்க காரணம் அவர்கள் தான்! ஆனால் அனுப்பியது அந்த கடவுள்! பிரபல பாடகியின் மெய்சிலிர்க்க வைத்த அனுபவம்!

கோலிவுட் திரையுலகில் பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவர் அனுராதா ஸ்ரீராம். இவர் பாடிய பல பாடல்கள் தெறிக்கவிடும் அளவிற்கு ஹிட்டாகியுள்ளன. இதனிடையே தற்போது இவர் கடவுளே நமக்கு வந்து உதவியதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுராதா ஸ்ரீராம் விரதம் மேற்கொண்டார். மிகுந்த வெப்பமாக இருந்ததால் அவர் கிரிவலத்தை மேற்கொண்டிருந்தார். வெட்கத்தினால் அவரது உடல்நிலை சற்று மோசமாகியது. கிரிவலத்தை நிறைவு செய்ய அரை மணி நேரம் இருந்த நிலையில் அவர் சோர்வினால் மயக்கமுற்றார்.
அப்போது கிரிவலத்தை நிறைவு செய்யும் பக்தர்களுக்கு இளைஞர்கள் சிலர் இலவசமாக தண்ணீர் மற்றும் பழரசம் வழங்கி கொண்டிருந்தனர். அனுராதா ஸ்ரீராம் மயங்கிய கண்ட இளைஞர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தனர். அதன் பின்னர் அவர் கிரிவலத்தை நிறைவு செய்வதற்கும் பேருதவியாக இருந்தனர்.
இதுகுறித்து அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், "எனக்கு கிரிவலத்தில் இளைஞர்களின் ரூபத்தில் கடவுள் தான் வந்து என்னை காப்பாற்றினார். ஒருவர் இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டால், தகுந்த நேரத்தில் இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றுவார் என்பதை நான் அன்று உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.
இந்த ஃபேஸ்புக் பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.